ADDED : செப் 12, 2025 10:48 PM

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகம் பல்வேறு நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கிறது. நீண்ட பிளாட்பாரம் அமைத்தல், புதிய மற்றும் பெரிய அளவிலான நுழைவாயில், பார்க்கிங் மேம்பாடு, டிக்கெட் கவுன்டர், அலுவலகம், பார்சல் புக்கிங் வளாகம், பயணியர் காத்திருப்பு அறை, நடைமேடை, கேன்டீன் வளாகம் என பல்வேறு வசதி ஏற்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், பயணிகள் உடமைகள் பரிசோதனை செய்யும் நவீன ஸ்கேனிங் மெஷின் பொருத்தப்படவுள்ளது. இதற்காக தருவிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மெஷின் தற்போது பணிகள் நடந்து பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இதில், ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் ஓய்வெடுத்து வருகின்றனர்.
நுண்ணிய உதிரிபாகங்கள் அமைந்துள்ள இந்த மெஷின் இது போன்ற செயல்களால் பயன் படுத்த முடியாமல் பழுதாகி விடும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஸ்கேனிங் மெஷின் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டுமென்பதே பயணிகளின் வேண்டு கோளாக உள்ளது.