sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பல மணி நேரம் கோவிலில் காத்திருந்து ஒரு நொடி தரிசிக்காவிடில் பயன் என்ன?

/

'பல மணி நேரம் கோவிலில் காத்திருந்து ஒரு நொடி தரிசிக்காவிடில் பயன் என்ன?

'பல மணி நேரம் கோவிலில் காத்திருந்து ஒரு நொடி தரிசிக்காவிடில் பயன் என்ன?

'பல மணி நேரம் கோவிலில் காத்திருந்து ஒரு நொடி தரிசிக்காவிடில் பயன் என்ன?


ADDED : ஜூன் 26, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; ''கடவுளை வணங்கும் நேரத்திலும் கூட மனிதர்களின் மனம் அலை பாய்கிறது. பல மணி நேரம் கோவிலில் காத்திருந்து, ஒரு நொடி இறைவனை தரிசிக்காமல் செல்வதால் பயன் இல்லை'' என்று கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசினார்.

சித்தம்பலம் நவக்கிரஹ கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு, நடந்த சிறப்பு வழிபாடுகளை துவக்கிவைத்து அவர் மேலும் பேசியதாவது:

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டவர் சிவபெருமான். அடியவர்கள் அடித்தாலும் அதை வாங்கிக் கொள்வார். வலி கொடுப்பதும்; வழி காட்டுவதும் அவரே.இறைவனை தரிசிக்கவும் அவன் அருள் வேண்டும். ஒருவருக்கு கஷ்டம் வந்துவிட்டால், கடவுள் அவர் அருகே வந்துவிட்டார் என்று அர்த்தம்.

பக்தியால், அன்பால் கடவுளையே கட்டிப் போட்டவர்கள் நம் முன்னோர்கள். அகத்தின் அழுக்கை சுத்தம் செய்ய இறைவன் நாமம் மட்டுமே உதவும்.

எந்த சோதனை வந்தாலும் அதை தாங்கும் சக்தியை கடவுள் தந்து விட்டால், அதிலிருந்து விடுபடும் வழியும் கிடைத்து விடும். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே. பெயர் வைப்பது முதல், வாழ்க்கையின் அனைத்து விதிகளையும் தீர்மானிப்பவர் அவரே. என்ன சோதனை வந்தாலும் அவற்றை சந்திக்கும் தைரியத்தை கடவுள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மகா மிருத்யுஞ்ஜய யாகத்தை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களால், பக்தர்கள் நவக்கிரஹங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us