/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரைப்புதுாரில் போலீஸ் ஸ்டேஷன் எப்போது அமைக்கப்படும்?
/
கரைப்புதுாரில் போலீஸ் ஸ்டேஷன் எப்போது அமைக்கப்படும்?
கரைப்புதுாரில் போலீஸ் ஸ்டேஷன் எப்போது அமைக்கப்படும்?
கரைப்புதுாரில் போலீஸ் ஸ்டேஷன் எப்போது அமைக்கப்படும்?
ADDED : ஆக 03, 2025 11:47 PM
பல்லடம்:
பல்லடம் உட்கோட்டத்தில், புதிதாக போலீஸ் ஸ்டேஷன் அமைப்பது குறித்து, சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது: கரைப்புதுார், கணபதிபாளையம் மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் பகுதிகளில் வெளி மாநில மாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதிகளை சார்ந்துதான் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. கரைப்புதுாரை ஒட்டி புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும்.
தற்போது பொங்கலூரில், புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.