/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?
/
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?
ADDED : ஆக 26, 2025 11:22 PM

சேவூர்; சேவூர் அருகே 70 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை மறித்து கம்பி வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேவூர் அருகே வேட்டுவபாளையம் ஊராட்சியில், தண்ணீர்பந்தல் காலனி, மேஸ்திரி காலனி, முத்தம்மாள் நகர், அவிநாசி சிறுதொழில் பேட்டை உட்பட பல இடங்களுக்கு பந்தம்பாளையத்தில் இருந்து அன்னுார் வரை செல்லும் இணைப்பு சாலை, தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் வழியாக செல்கிறது. இதில் க.ச.எண்: 505 மற்றும் 506 ஆகிய காலையில் இடையில் உள்ள தடத்தை கடந்த, 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன், ஊராட்சி சார்பில், மெட்டல் போட்டும் அதன் மேல் ஜல்லி பரப்பி ரோடு போடப்பட்டது. இந்நிலையில் க.ச.எண்: 506ல் காலையில் வீட்டுமனை இடங்களாக பிரித்து மற்றும் க.ச.எண்: 505 கிரயம் பெற்றுள்ள தனி நபர் ஒருவர் இதுவரை பாதையை மறைத்து கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து தாசில்தார், வேட்டுவபாளையம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் முகாம் ஆகியவற்றில் அப்பகுதி பொதுமக்கள் பாதையை மீட்டுத்தர கோரி மனு அளித்திருந்தனர்.
ஆனால், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், 5 கி.மீ., சுற்றி அவிநாசி சிறுதொழில்பேட்டைக்கு கனரக வாகனங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தனி நபர் ஆக்கிரமித்த கம்பி வேலியை அகற்றி, பொதுப்பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு மீட்டுத்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.