/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோண்டப்பட்ட ரோடு புதுப்பிப்பது எப்போது?
/
தோண்டப்பட்ட ரோடு புதுப்பிப்பது எப்போது?
ADDED : ஜூலை 03, 2025 12:26 AM

பல்லடம்:
பல்லடம் அடுத்த சேடபாளையம்- - வெட்டுப்பட்டாங்குட்டை செல்லும் ரோடு, புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டு கடந்த சில மாதங்கள் முன் பணிகள் துவங்கின. ரோடு தோண்டப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
சேடபாளையம் -- வெட்டுப்பட்டாங்குட்டை ரோட்டில், ஏராளமான குடியிருப்புகள், விவசாய நிலங்கள், விசைத்தறி கூடங்கள் உள்ளிட்டவை உள்ளன. வெட்டுப்பட்டாங்குட்டை வழியாக திருப்பூர் - பல்லடம் செல்லும் நெடுஞ்சாலையை இணைப்பதால், எண்ணற்ற வாகன ஓட்டிகள் இவ்வழியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பனியன் கம்பெனி மற்றும் பள்ளி, கல்லுாரி வாகனங்களும் இவ்வழியாக வந்து செல்கின்றன. இந்த ரோடு புதுப்பிப்பதற்காக திட்டமிடப்பட்டு, கடந்த நான்கு மாதம் முன் தோண்டப்பட்டது.
இதன் பிறகு, சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. ஜல்லிக்கற்கள் ரோடு முழுவதும் பரவிக் கிடப்பதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலர், தவறி விழுந்து காயமடைகின்றனர். பள்ளி செல்லும் மாணவ மாணவியரும் இந்த ரோட்டை பயன்படுத்தி வருவதால், விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, கிடப்பில் உள்ள ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.