/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர்புற நல வாழ்வு மையம் திறப்பது எப்போது?
/
நகர்புற நல வாழ்வு மையம் திறப்பது எப்போது?
ADDED : ஏப் 05, 2025 05:47 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 15வது வார்டு, அவிநாசிக்கவுண்டம் பாளையத்தில் மாநகராட்சி சார்பில், புதிதாக நகர்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.
இதன் கட்டட பணி முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. இன்றுவரை பயன்பாட்டுக்கு வராமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவத்திற்கு வெகுதொலைவு செல்ல வேண்டி உள்ளது என புலம்பி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
அவிநாசி கவுண்டம்பாளையம், ஏ.வி.பி.,லே - அவுட், அங்கேரிபாளையம் பகுதி பொதுமக்கள் உடல் நல பாதிப்பிற்கு இங்கிருந்து, வெகு தொலைவில் உள்ள பெரியார் காலனி, நெசவாளர் காலனி, 15 வேலம் பாளையம் உள்ளிட்ட பகுதி சுகாதார மையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. சிரமமாக உள்ளது.
இங்கு நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளனர். உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.