sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தென்னையை அழிக்கும் வெள்ளை ஈக்கள்; விவசாயிகள் கண்ணீர்

/

தென்னையை அழிக்கும் வெள்ளை ஈக்கள்; விவசாயிகள் கண்ணீர்

தென்னையை அழிக்கும் வெள்ளை ஈக்கள்; விவசாயிகள் கண்ணீர்

தென்னையை அழிக்கும் வெள்ளை ஈக்கள்; விவசாயிகள் கண்ணீர்


ADDED : பிப் 04, 2025 01:07 AM

Google News

ADDED : பிப் 04, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 60 ஆயிரம் எக்டர் அளவுக்கு, தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரை சந்தை, இந்தியாவின் இரண்டாவது பெரிய சந்தை காங்கயத்தில் இயங்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, கொப்பரைக்கு சரியான விலை கிடைக்கவில்லை; கடந்த ஜூலை மாதத்துக்கு பிறகு, 15 ரூபாய் வரை விற்கப்பட்ட தேங்காய், 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

எடை குறைந்த தேங்காய்


தேங்காய் விலை எவ்வளவு உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு உதவவில்லை. தென்னை மரங்களை, 2015ம் ஆண்டு ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மரங்களில், தேங்காய் சாகுபடி, 70 சதவீதம் குறைந்துவிட்டது. அதற்கு பிறகு, தேங்காய் எடையும் குறைந்துவிட்டது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, தோட்டக்கலைத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியது. மரங்களை தாக்கிய வெள்ளை ஈ பாதிப்பு, 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.

முழு மானியத்தில்உரம்


தென்னை விவசாயிகளுக்கு, முழு மானியத்தில், நுண்ணுாட்ட சத்துக்கள் அடங்கிய உரம் போதிய அளவு வழங்க வேண்டும். செலவை குறைக்க, 10:26:26 காம்பளக்ஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்கோ, 10:26:26 உரம், 50 கிலோ மூட்டை, 1,350 ரூபாயாக இருந்தது, திடீரென, 350 ரூபாய் விலை உயர்ந்துள்ளது; மீண்டும் பழைய விலைக்கே வழங்க வேண்டும்.

திருப்பூர் மாவட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட 'மோனோகுரோடோபாஸ்' விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்; தடை செய்த களைக்கொல்லி, பூச்சிமருந்து பயன்பாட்டையும் தடுக்க வேண்டும். தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையும், தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து, வெள்ளை ஈயை கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us