sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'நோட்டா'வுக்கு வாக்குகள் இந்த முறை குறையும்?

/

 'நோட்டா'வுக்கு வாக்குகள் இந்த முறை குறையும்?

 'நோட்டா'வுக்கு வாக்குகள் இந்த முறை குறையும்?

 'நோட்டா'வுக்கு வாக்குகள் இந்த முறை குறையும்?


ADDED : ஏப் 23, 2026 06:04 AM

Google News

ADDED : ஏப் 23, 2026 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு தேர்தலிலும் 'நுாறு சதவீத வாக்குப்பதிவு' என்பதைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வாக மேற்கொண்டு வருகிறது. யதார்த்தத்தில் 70 சதவீதத்தைக் கடப்பதே பெரும் சவாலாக உள்ளது.

இந்த முறை அந்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியும் எனத் தேர்தல் ஆணையம் அதீத நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணி 'எஸ்.ஐ.ஆர்.' பணி. இதன் மூலம் இரட்டைப் பதிவு, இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரி மாறியவர்களின் ஓட்டுகள் எனப் பதிவாக வாய்ப்பே இல்லாத 'ஓட்டுகள்' பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் தெளிவு பெற்றுள்ளதால், இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் தானாகவே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நோட்டா' சாதனை தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற வாக்காளர்களின் ஜனநாயகக் கோபத்திற்கு அங்கீகாரம் அளிக்கவே, கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 'நோட்டா' அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுக ஆண்டு (2014): நாடு முழுவதும் 59.97 லட்சம் ஓட்டுகள் (1.1 சதவீதம்) நோட்டாவுக்கு விழுந்தன.

தமிழகத்தின் பங்கு: 39 தொகுதிகளில் 5.82 லட்சம் ஓட்டுகள் (1.4 சதவீதம்) பதிவாகின.

நீலகிரி சாதனை: இந்தியாவிலேயே நோட்டா ஓட்டுகளை அதிகம் பதிவு செய்த தொகுதியாக நீலகிரி (2014) உருவெடுத்தது. அங்கு மட்டும் 46,559 ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாண்டு கணக்கு (2018--2022): பல்வேறு தேர்தல்களில் சேர்த்து மொத்தம் 1.29 கோடி வாக்காளர்கள் 'யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.

நான்குமுனைப் போட்டி அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.

யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், நோட்டாவுக்குப் பதிவிடுவது வாக்காளரின் உண்மையான மனநிலையைக் காட்டும். நோட்டா அறிமுகமானபோது இருந்த விழிப்புணர்வு தற்போது மக்களிடையே சற்று மங்கியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் தற்போது தி.மு.க., - அ.தி.மு.க., - நா.த.க., - த.வெ.க. என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. இத்தனை காலமும் குறிப்பிட்ட கட்சிகளுக்கே மாறி மாறி வாக்களித்துச் சலித்துப் போனவர்களுக்கு, இப்போது கூடுதல் தேர்வுகள் கிடைத்துள்ளன.

இதனால், இதுவரை நோட்டாவுக்கு ஓட்டளித்து வந்தவர்கள், இம்முறை தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களித்துவிட்டு, நோட்டாவுக்கு 'டாட்டா' சொல்லும் நிலையும் ஏற்படலாம்.

ஆக, இந்தத் தேர்தல் 100 சதவீத வாக்கை நோக்கிய பயணமா அல்லது நோட்டாவைத் தாண்டிய மாற்றத்திற்கான பயணமா என்பது வாக்குப்பதிவு முடிவில் தெரிந்துவிடும்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us