/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'முதல்வர் படைப்பகம்' அமையுமா?
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'முதல்வர் படைப்பகம்' அமையுமா?
கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'முதல்வர் படைப்பகம்' அமையுமா?
கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'முதல்வர் படைப்பகம்' அமையுமா?
ADDED : டிச 06, 2025 05:14 AM

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'முதல்வர் படைப்பகம்' அமைக்கலாம் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.: திருப்பூர் கலெக்டர் அலுவலக கட்டடத்தில், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகம் செயல்படுகிறது.
இத்துறை சார்பில் கடந்த நான்காண்டாக, போட்டி தேர்வுக்குரிய பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அங்குள்ள நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், வார, மாத இதழ், போட்டி தேர்வுக்குரிய புத்தகங்கள் என அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன. தினசரி, 50 பேர் அந்த நுாலகத்தில் அமர்ந்து படிக்கின்றனர்; பலர், போட்டி தேர்வுக்கும் தயாராகின்றனர்.
மேலும், வேலைவாய்ப்புத்துறை சார்பில், போட்டி தேர்வு தொடர்பான பயிற்சி ஆண்டு முழுக்க வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 3,000க்கும் மேற்பட்டோர் போட்டி தேர்வுக்குரிய பயிற்சியில் பங்கெடுத்து, தேர்வெழுதியுள்ளனர்; இதுவரை, 68 பேர் அரசுப்பணிக்கும் தேர்வாகியுள்ளனர். போட்டி தேர்வை எதிர்கொள்வதற்கான சிறந்த கற்றல் மையமாக அந்த இடம் அமைந்திருக்கிறது. தமிழக அரசின் 'நான் முதல்வன்' உள்ளிட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டங்கள், வேலை வாய்ப்புத்துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் படைப்பகத்தையும் அந்த இடத்தில் அமைப்பது தான் சிறந்தது என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காலி கட்டடங்களை பயன்படுத்தலாமே!
மொத்தம், ஏழு மாடியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறை அலுவலகங்களும் செயல்படுகின்றன. இதில், பல கட்டடங்கள் காலியாக உள்ளன. தற்போது கூட, அங்கு செயல்பட்டு வந்த, தொழில் துறை அலுவலகம், அவிநாசி ரோடு, குமார் நகர் அருகே கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த அத்துறை சார்ந்த, அலுவலக கட்டடங்கள் காலியானது. இதுபோன்று காலியாக உள்ள கட்டடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதியுடன் 'முதல்வர் படைப்பகம்' ஏற்படுத்தலாம் என்ற யோசனையும் எழுந்துள்ளது.

