/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரிக்கும் விபத்துகள் சாலை சீரமைக்கப்படுமா?
/
அதிகரிக்கும் விபத்துகள் சாலை சீரமைக்கப்படுமா?
ADDED : ஏப் 24, 2025 06:38 AM

திருப்பூர்; திருப்பூர், ஆண்டிபாளையம் குளம் அருகே, சின்னாண்டிபாளையம் பிரிவில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாட்டு பணி நடந்தது.
சிறுபாலங்கள் அமைத்து, மழைநீர் தேங்காதபடி, 400 மீட்டர் அளவுக்கு, ரோடு புதுப்பிக்கப்பட்டது. அதன் அருகிலேயே, தண்ணீர் குழாய் உடைப்பால் ரோடு சேதமாகியிருந்தது. கடந்த ஒரு மாதத்தில், ரோடு சேதம் அதிகமாகி, பெரிய குழியாக மாறிவிட்டது. ரோட்டின் பாதி அளவுக்கு ரோடு சேதமாகிவிட்டது. ரோட்டின் இடதுபுறமாக செல்வோர், குழியில் இறங்காமல் செல்ல திடீரென வலது புறம் நகர்ந்து செல்வதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. விரைவில், அப்பகுதியில் 'பேட்ஜ் ஒர்க்' அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

