/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சார்-பதிவாளர் அலுவலகம் பொங்கலுாரில் அமையுமா?
/
சார்-பதிவாளர் அலுவலகம் பொங்கலுாரில் அமையுமா?
ADDED : மார் 31, 2025 11:34 PM
பொங்கலுார்; பொங்கலுார், திருப்பூருக்கு மிக அருகில் உள்ளதால் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்பகுதிக்கு திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.
அந்த அலுவலகங்களில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். திருப்பூர் மற்றும் பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிலாக பொங்கலுாரில் தனியாக சார் - பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை. தற்போது கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளை பிரித்து புதிதாக சார் - பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
எனவே, பொங்கலுாரில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைந்தால் போக்குவரத்து நெருக்கடி இருக்காது. பொதுமக்களுக்கு அலைச்சல் மிச்சமாகும். சமீபத்தில் ஒன்றிய அலுவலகத்துக்கு நான்கு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பழைய கட்டடம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. எனவே, இட பிரச்னையும் இருக்காது. பழைய ஒன்றிய அலுவலகத்திலேயே சார் - பதிவாளர் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.