/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூறைக்காற்றுக்கு சாய்ந்த மரக்கன்றுகள் நிமிருமா?
/
சூறைக்காற்றுக்கு சாய்ந்த மரக்கன்றுகள் நிமிருமா?
ADDED : ஏப் 14, 2025 04:33 AM

பல்லடம், : பல்லடம் பகுதியில், கடந்த ஏப்., 6ம் தேதி அன்று இரவு, சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில், மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன. வீடுகள், கடைகள் சேதமடைந்தன. நெடுஞ்சாலைகளில் பராமரிக்கப்பட்டு வந்த எண்ணற்ற மரக்கன்றுகளும் சாய்ந்தன.
பல்லடம் - -திருப்பூர் ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஏராளமான மரங்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் இவை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், சூறைக்காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், நுாற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், சாய்ந்த மரங்கள் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளன. காற்றில் சரிந்த மரங்கள் துளிர்விடாமலும், கால்நடைகள் உண்டும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எண்ணற்ற மனித உழைப்பும் வீணாகக்கூடும். பசுமையை ஏற்படுத்தும் நோக்கில், காற்றில் சாய்ந்த மரக்கன்றுகளை நிமிரச் செய்ய நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

