/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அம்மனுக்கு தீர்த்தங்களால் பெண்கள் அபிேஷகம்
/
அம்மனுக்கு தீர்த்தங்களால் பெண்கள் அபிேஷகம்
ADDED : ஆக 10, 2025 02:43 AM

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து அவிநாசி, செங்காட்டு திடலில் எழுந்தருளியுள்ள ராக்காத்தம்மனுக்கு ஒன்பது வகை தீர்த்தங்கள் சுமந்து பெண்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.
ஹிந்து அன்னையர் முன்னணியின் திருப்பூர் மாநகர், அவிநாசி நகர், அவிநாசி தெற்கு, வடக்கு ஒன்றியங்கள், திருமுருகன் பூண்டி நகர கிளைகள் இணைந்து, ஆடி மாத அபிஷேக திருவிழா நடத்தின.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், தீர்த்தக் குடம் உள்ளிட்டவற்றை எடுத்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மெயின் ரோடு,மேற்கு ரத வீதி, சேவூர் ரோடு ஆகியவற்றில் ஊர்வலமாக சென்றனர்; ராக்காத்தம்மன் கோவிலை அடைந்த இவர்கள், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
முன்னதாக ஊர்வலம் திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதினம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலையில் துவக்கிவைக்கப்பட்டது.
ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பொன் புவனேஸ்வரி சீனிவாசன், ஹிந்து அன்னையர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.