/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பெண் தொழிலாளர் பாதுகாப்பு சிறப்பு'
/
'பெண் தொழிலாளர் பாதுகாப்பு சிறப்பு'
ADDED : டிச 12, 2024 11:53 PM

திருப்பூர் : ''திருப்பூரில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக உள்ளது'' என்று மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி கூறினார்.
பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடந்தது. பொதுச்செயலாளர் திருக்குமரன் முன்னிலை வகித்தார். திருப்பூர் தொழில் பங்களிப்போர் அமைப்பு தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.
20 சதவீதம் பேர் புலம்பெயர்ந்தோர்
ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசுகையில், 'திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழிலில், 20 சதவீதம் புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர் பணிபுரிகின்றனர். பெண் தொழிலாளர்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பானதாக திருப்பூர் தொழில் குழுமம் உள்ளது. கருத்தரங்க நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு, சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிரப்படும்.
பெண்களுக்கு, அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கற்பிக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது அவசியம்,' என்றார்.
திருப்பூரில் இயங்கும் மகளிர் உள்கமிட்டிகள்
இணைச்செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், 'தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள், ஆடை உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக அரசு, மகளிருக்கான 2,800 உள் கமிட்டிகளை நிறுவியுள்ளது. அவற்றில் பல கமிட்டிகள் திருப்பூரில் இயங்கிவருகின்றன.
தொழிற்சங்கங்களை சேர்ந்த பெண் தலைவர்கள், இந்த துறையில் பெண் தொழிலாளர்களை மேலும் மேம்படுத்துவதற்கான ஊதிய ஒப்பந்த விவாதங்களில் பங்கேற்கவேண்டும்' என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி பேசுகையில், 'திருப்பூரில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக உள்ளது' என்றார்.
ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பெண் தொழில் முனைவோர் துணைக்குழு உறுப்பினர் சுகந்தி நன்றி கூறினார்.

