/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உலக செஸ் சாம்பியன்' குகேஷ்; திருப்பூர் அடித்தளம்.. 10 ஆண்டில் கனவை நனவாக்கி சாதித்த குகேஷ்
/
'உலக செஸ் சாம்பியன்' குகேஷ்; திருப்பூர் அடித்தளம்.. 10 ஆண்டில் கனவை நனவாக்கி சாதித்த குகேஷ்
'உலக செஸ் சாம்பியன்' குகேஷ்; திருப்பூர் அடித்தளம்.. 10 ஆண்டில் கனவை நனவாக்கி சாதித்த குகேஷ்
'உலக செஸ் சாம்பியன்' குகேஷ்; திருப்பூர் அடித்தளம்.. 10 ஆண்டில் கனவை நனவாக்கி சாதித்த குகேஷ்
ADDED : டிச 13, 2024 11:05 PM

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) சார்பில், சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங்லிரெனை வீழ்த்தி இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், 18 பட்டம் வென்றார். இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
அன்று களம்கண்ட குகேஷ்
கிராண்ட் மாஸ்டர், உலக செஸ் சாம்பியனாக உருவெடுத்துள்ள குகேஷ், திருப்பூரில், 2014ல் திருப்பூர் காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடந்த அனைத்திந்திய தரவரிசைக்கான செஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
அரசன் செஸ் அகாடமி, திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் நடத்திய இப்போட்டியில், ஒன்பது வயதுக்கு உட்பட்ட பிரிவில்,நான்காமிடம் பெற்று, பரிசும் வென்றுள்ளார். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இவர் செஸ் மீது கொண்ட தீராத பயிற்சி, முயற்சி, போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வமே குகேஷ் சாதிக்க உதவியுள்ளது.
பல 'குகேஷ்'கள் உருவாவர்
ராஜேந்திரன், பொருளாளர், திருப்பூர் மாவட்ட செஸ் அசாசியேஷன்:
குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால், இந்தியாவில், தமிழகத்தில் செஸ் பெரும் எழுச்சி காணும். செஸ் ஒலிம்பியாட் நடந்த பின், செஸ் தலைநகர் சென்னை என்ற ஒரு பேச்சு நாடு முழுதும் உதித்தது; குகேஷின் வெற்றி மூலம் அது உறுதியாகியுள்ளது. இந்தியாவின் செஸ் தலைநகராக சென்னை இருந்த நிலை மாறி, உலகத்துக்கு செஸ் தலைநகராக சென்னை மாறியுள்ளது. வரும் நாட்களில் மேலும் பல குகேஷ்கள் உருவாவர்.
நகர்த்தலில்மாயாஜாலம்
பூபதி, செஸ் பயிற்சியாளர்:
குகேஷின் கடுமையான பயிற்சி தான் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. செஸ் போட்டியை பொறுத்தவரை எதிரில் யார் இருந்தாலும் நாம் பயப்படக்கூடாது. அதிகமாக செஸ் விளையாடிய அனுபவமே, விஸ்வநாதன் ஆனந்த்தை வெற்றி பெறச் செய்தது. அதே போல், குகேஷூம் கடும் பயிற்சி மேற்கொண்டு தான், வெற்றிக்கனியைச் சுவைத்துள்ளார்.
ஆட்டத்தின் போது தடுமாறாமல், மிக கவனமுடன், சீன வீரரின் நகர்த்தலுக்கு காத்திருந்து, சரியான நேரத்தில், நகர்த்தலில் மாயஜாலம் நிகழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். செஸ் மாஸ்டரை மட்டும் நம்பி வெற்றி இல்லை.
செஸ் விளையாடுவது, தொடர்ந்து பயிற்சி எடுப்பதில், வீரர்களின் ஆர்வத்தில் தான் உள்ளது. முன்னாள் வீரர்கள் சாம்பியன்கள்பலரும், சீன வீரருக்கு தான் அதிக வாய்ப்பு எனகணித்திருந்தனர்; ஆனால், குகேஷின் அதீத ஈடுபாட்டால், அதை தவிடு பொடியாக்கியுள்ளார்.
'குகேஷ்' போல் சாதிப்பேன்
கோகுலகிருஷ்ணன், 'ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா' நடத்திய, செஸ் போட்டியில் தங்கம் வென்றவர்: உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டி யில், ஆட்டத்தின் நுணுக்கம், நகர்த்தலையும் மிக கவனமுடன் பார்த்தேன். நொடிக்கு நொடி கூட கவனச் சிதறல் இல்லாமல் ஆட்டம் இருந்ததால், வெற்றியை வசமாக்கி விட்டார் குகேஷ். எதிர்காலத்தில் நானும் குகேஷ் போல் கிராண்ட் மாஸ்டராக மாறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்; குகேஷ்வழிமுறைகளை பின்பற்றுவேன்.

