/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'யார்னெக்ஸ்' இன்று துவக்கம்! ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரே கூரையின் கீழ் 4 கண்காட்சி
/
'யார்னெக்ஸ்' இன்று துவக்கம்! ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரே கூரையின் கீழ் 4 கண்காட்சி
'யார்னெக்ஸ்' இன்று துவக்கம்! ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரே கூரையின் கீழ் 4 கண்காட்சி
'யார்னெக்ஸ்' இன்று துவக்கம்! ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரே கூரையின் கீழ் 4 கண்காட்சி
ADDED : செப் 25, 2025 12:22 AM
திருப்பூர்:இந்திய பின்னலாடைத்துறை தலைநகராகிய திருப்பூரில், 'யார்னெக்ஸ்' - டெக்ஸ் இந்தியா, - 'அப்பேரல் சோர்சிங் பேர்' மற்றும் 'டைகெம் டெக்ஸ் பிராசஸ்' ஆகிய நான்கு கண்காட்சிகள், இன்று ஐ.கே.எப்., வளாகத்தில் துவங்குகின்றன.
பின்னலாடை தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், 2009ம் ஆண்டில் இருந்து, 'யார்னெக்ஸ்' என்ற நுாலிழைகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று, 16ம் ஆண்டு 'யார்னெக்ஸ்' கண்காட்சி துவங்குகிறது. கடந்த, 22 ஆண்டுகளாக, எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா நிறுவனம், இத்தகைய கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஒட்டுமொத்த உற்பத்தி சங்கிலியை காட்சிப்படுத்தும், நான்கு கண்காட்சிகள், ஒரே இடத்தில் நடக்கின்றன.
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி, அணைப்புதுாரிலுள்ள ஐ.கே.எப்., வளாகத்தில், இன்று துவங்கி, தினமும் காலை, 10:00 மணிமுதல், இரவு, 7:00 மணி வரை நடக்கும், இந்த நான்கு கண்காட்சிகள் வாயிலாக, மூலப்பொருட்களில் துவங்கி முழுமை பெறப்பட்ட ஆடைகள் வரை அனைத்து சேவைகளை, ஒரே இடத்தில் பெறலாம் என, கண்காட்சி அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளர்கள் கூறியதாவது:
கண்காட்சி, 319 'ஸ்டால்'களுடன் நான்கு அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர், இறக்குமதியாளர், ஆடை பிராண்ட், 'தனியார் லேபிள்' உற்பத்தியாளர், சில்லரை விற்பனையாளர், வினியோகிஸ்தர் என, அனைத்து தரப்பினரும் இடம்பெறுகின்றனர்.
கண்காட்சியை, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல், பெங்களூரு ஆதித்யா பிர்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி நரஹரி, பெப்கோ குளோபல் சோர்சிங் நிறுவனத்தின் தேசிய தலைவர் ஷில்பி திவாரி ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.
கண்காட்சியில், 'டெக்ஸ்டைல் பேர்ஸ் இந்தியா' டிரெண்ட் போரம்' அறிமுகம் செய்யப்படும். புதுமையான துணி, நவீன ஆடைகள், சீசன் வண்ணங்கள், நிலையான மற்றும் மறுசுழற்சி முறை ஸ்டால்களும் இடம்பெறும். இந்திய மற்றும் உலகளாவிய பேஷன் போக்குகளுடன் இணங்குவதற்கு தேவையான தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமையான மற்றும் சிறப்பான பொருட்களை காட்சிப்படுத்துவோருக்கு, 'டி.எப்.ஐ., பிரிஸம்' என்ற விருது வழங்கி கவுரவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.