/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருக்கு... ஆனா இல்ல! பயன்படுத்த முடியாத 'டைம் கீப்பர் செட்'
/
இருக்கு... ஆனா இல்ல! பயன்படுத்த முடியாத 'டைம் கீப்பர் செட்'
இருக்கு... ஆனா இல்ல! பயன்படுத்த முடியாத 'டைம் கீப்பர் செட்'
இருக்கு... ஆனா இல்ல! பயன்படுத்த முடியாத 'டைம் கீப்பர் செட்'
ADDED : நவ 14, 2024 11:37 PM

அவிநாசி ; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் மற்றும் நடத்துனர்கள் எளிதில் அணுக முடியாத வகையில், 'டைம் கீப்பர் ஷெட்' மறைவாக வைத்துள்ளனர்.
'டைம் கீப்பர் ஷெட்' உள்ள இடத்துக்கு முன் பகுதியில், திருப்பூர் செல்லும் டவுன் பஸ்கள் வரிசையாக நிறுத்துகின்றனர். அதனால், தொலைதுார அரசு பஸ்களின் நடத்துனர்கள் கையெழுத்து போடுவதை நேரமின்மை காரணமாக தவிர்த்து விடுகின்றனர்.
மேலும் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும் என்ற சூழலில், பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லும் நடத்துனர்கள் ஒரு சிலர் கையொப்பம் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
'டைம் கீப்பர் ஷெட்' உள்ள இடத்தை சுற்றிலும், மாலை நேரங்களில் மது அருந்தி விட்டு வரும் போதை நபர்கள் சிறுநீர் கழிப்பதும்,பாட்டில்களை உடைத்துப் போடுவதும் நடைபெறுகிறது.
இதனால், ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடால்காலை முதல் இரவு வரை பணியாற்றுவதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர்.
புதிய பஸ் ஸ்டாண்டில், தற்காலிக கடைகள் அமைத்து வாடகை வாங்கும் பேரூராட்சி நிர்வாகம், பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அரசுத்துறை சார்ந்து வைக்கப்பட்டுள்ள ஷெட்டை எளிதில் பயன்படுத்த முடியாதபடி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் தனலட்சுமியிடம் கேட்டபோது, 'பொதுமக்கள் நலன் கருதி டைம் கீப்பர் ஷெட் இடம் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை உடனே எடுக்கப்படும்,' என்றார்.