ADDED : மே 27, 2025 11:36 PM
திருப்பூர், : வீர தீர செயல்கள் செய்த பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
வரும் ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழாவின்போது, 2025ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. பாராட்டத்தக்கவகையில் வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஏதேனும் ஒருவகையில் துணிச்சலான முறையில் செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளோர், https://award.tn.gov.in என்கிற தளத்தில், வரும் ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தகுதியுள்ளோர், ஒருபக்க அளவில் தங்களைப்பற்றிய விவரம் மற்றும் வீர சாகச செயல் விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிட்டு, கையேடாக தயாரித்து, மூன்று நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அறை எண், 35ல் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஜூன் 15க்குள் சமர்ப்பிக்கவேண்டும்.