/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறகுப்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
இறகுப்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 12, 2025 11:20 PM
திருப்பூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'ஸ்டார் அகாடமி' மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 'ஸ்டார் அகாடமி'யில், தலா, 20 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, மாதத்தில், 25 நாட்கள் இறகுப்பந்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேவையான விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது. மாணவ, மாணவியருக்கான தேர்வு, 28ம் தேதி காலை, 8:00 மணிக்கு, பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க, 50 வயதுக்கு உட்பட்ட இறகுபந்து பயிற்றுனர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற, விளையாட்டு ஆணையத்தின் ஓராண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தற்காலிகமாக பணியில் சேரும் பயிற்சியாளருக்கு, 11 மாதங்களுக்கான கட்டணமாக, மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். வரும், 20ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கான நேர்காணல், 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 0421 2244899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.