/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனம் பழத்தில் இருந்து நுால் இளைஞரின் சாதனை முயற்சி
/
பனம் பழத்தில் இருந்து நுால் இளைஞரின் சாதனை முயற்சி
பனம் பழத்தில் இருந்து நுால் இளைஞரின் சாதனை முயற்சி
பனம் பழத்தில் இருந்து நுால் இளைஞரின் சாதனை முயற்சி
UPDATED : செப் 28, 2025 03:46 AM
ADDED : செப் 28, 2025 03:27 AM

திருப்பூர்:பனம் பழத்தில் இருந்து நார் பிரித்து, பருத்தி கலப்பு நுாலிழை மற்றும் ஆடைகள் வடிவமைத்து, இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
![]() |
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், எம்.டெக்., பட்டதாரி. ஐ.டி., ஊழியர்.
பனம்பழத்தில் இருந்து நார் பிரித்து, பருத்தியுடன் சேர்த்து கலப்பு நுாலிழை தயாரித்து, அதிலிருந்து ஆடை வடிவமைத்துள்ளார். திருப்பூரில் நடந்த, 'யார்னெக்ஸ்' கண்காட்சியில், பனம்பழ நாரில் தயாரித்த துணிகள், பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
சுரேஷ்குமார் கூறியதாவது:
கொரோனா ஊரடங்கின் போது, பனம் பழத்தில் இருந்து, 'பைபர்' தயாரிக்கும் முயற்சியை துவக்கினேன். சிறிய அளவு நார் எடுத்து, பைபராக மாற்றி, அதை 'ஸ்பின்னிங்' மில்லில், பருத்தியுடன் இணைத்து நுாலாக்கினேன்.
கடந்தாண்டு, பனம் பழத்தில் இருந்து, 30 கிலோ 'பைபர்' எடுத்து, 90 சதவீதம் பருத்தி பஞ்சு, 10 சதவீதம் பனம்பழ நார் என, சோதனை முறையில், 30 கிலோ நுால் தயாரித்து, தறியில் துணியாக மாற்றி, ஆடை வடிவமைத்தேன்.
ஒரு மீட்டர் துணி உற்பத்திக்கு, இரண்டு பழங்கள் தேவைப்படுகிறது.இயற்கையான முறையில், வண்ணம் சேர்க்காமல், ஆடை வடிவமைத்து, பல்வேறு கண்காட்சிகளில் பார்வைக்கு வைத்து வருகிறேன்.
மும்பை ஆய்வகம், கோவை 'சிட்ரா' ஆய்வகத்தில் ஆய்வு செய்து, 99.7 சதவீதம் அளவுக்கு, 'ஆன்டி பாக்டீரியா' தன்மை இருப்பது உறுதி செய்துள்ளோம். முன்னணி நிறுவனங்களுடன் சேர்ந்து, அடுத்தக்கட்ட முயற்சியை தொடரலாம் என முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.