தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நிஜ உலகப் பிரச்னைக்குத் தீர்வு தேடும் இளம் அறிவியல் சிந்தனையாளர்கள்

நிஜ உலகப் பிரச்னைக்குத் தீர்வு தேடும் இளம் அறிவியல் சிந்தனையாளர்கள்

நிஜ உலகப் பிரச்னைக்குத் தீர்வு தேடும் இளம் அறிவியல் சிந்தனையாளர்கள்


UPDATED : நவ 14, 2026 06:03 PM

ADDED : நவ 14, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 06:03 PM ADDED : நவ 14, 2026 06:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ.ஐ., கற்பனை உலகைக் காட்டும் காலத்தில், நிஜ உலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடும் இளம் அறிவியல் சிந்தனையாளர்கள் திருப்பூரில் உருவாகி வருகின்றனர்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் அண்மையில் நடந்த 32வது தேசிய அறிவியல் மாநாட்டில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 130 மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

சமையலறையில் தொடங்கும் சவால்கள் முதல் மனித – விலங்கு மோதல், பெண்கள் பாதுகாப்பு, சாயக்கழிவுநீரில் உள்ள கன உலோகங்களைக் கண்டறிந்து தணித்தல், விவசாயத்தில் நீர் இழப்பைக் குறைத்தல், காற்றுத் தரக் கண்காணிப்பு, கழிவுகளில் இருந்து வளங்களை உருவாக்குதல் எனப் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மாணவர்களின் ஆய்வுகள் அமைந்திருந்தன.

குறிப்பாக, யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தேனீக்கூடு வேலி அமைத்தல், பெண்களின் பாதுகாப்புக்காக ஆடையிலேயே எச்சரிக்கை வசதி உருவாக்குதல் போன்ற புதுமையான யோசனைகளும் இடம்பெற்றன.

கடும் போட்டிக்குப் பின், இரண்டு அரசுப் பள்ளிகள், 12 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14 மாணவர்களின் படைப்புகள் தேசிய அளவிலான அடுத்தகட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இவர்களின் படைப்புகள் தேசிய அளவிலும் சாதிக்கும் என வழிகாட்டிய ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us