/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியலில் இணைய இளைஞர்கள்... ஆன்லைனில் ஆர்வம்! இரு தொகுதிகளில் 8,279 பேர் விண்ணப்பம்
/
வாக்காளர் பட்டியலில் இணைய இளைஞர்கள்... ஆன்லைனில் ஆர்வம்! இரு தொகுதிகளில் 8,279 பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் இணைய இளைஞர்கள்... ஆன்லைனில் ஆர்வம்! இரு தொகுதிகளில் 8,279 பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் இணைய இளைஞர்கள்... ஆன்லைனில் ஆர்வம்! இரு தொகுதிகளில் 8,279 பேர் விண்ணப்பம்
ADDED : டிச 03, 2024 08:59 PM

உடுமலை; உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 8 ஆயிரத்து, 279 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்தலில் ஜனநாயக கடமையாற்றுவதில், இளைஞர்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களது ஆசைகளை நிறைவேற்ற முதலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்.
இதற்கு வாய்ப்பளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வகையில், இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த, அக்., 29ல் வெளியிடப்பட்டது.
உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 954 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 727 பெண்கள் மற்றும் 31 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2 லட்சத்து, 64 ஆயிரத்து, 712 பேர் இடம் பெற்றிருந்தனர்.
மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து, 109 ஆண்கள், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 333 பெண்கள், 19 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து, 36 ஆயிரத்து, 461 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் மேற்கொள்ள, நவ., 28 வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியது.
ஆன்லைன் வாயிலாகவும், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மொபைல் ஆப் வாயிலாகவும் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு முகாம்
மேலும், உடுமலை தொகுதியில், 129 ஓட்டுச்சாவடி மையங்களில் அமைந்துள்ள, 294 ஓட்டுச்சாவடிகளிலும், மடத்துக்குளம் தொகுதியில், 119 ஓட்டுச்சாவடி மையங்களில் அமைந்துள்ள, 287 ஓட்டுச்சாவடிகளிலும், கடந்த, 16, 17 மற்றும் 23,24ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தன.
நவ., 28 உடன் முடிவடைந்த, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில், நேரடியாக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை விட, ஆன்லைன் வாயிலாகவும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் மொபைல் ஆப் வாயிலாகவும், அதிகளவு சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை தொகுதியில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, முகாம்கள் வாயிலாக, 362 விண்ணப்பங்களும், ஆன்லைன் வாயிலாக, 4,385 பேர் என, மொத்தம், 4,747 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதே போல், பெயர் நீக்கம் செய்ய, முகாம்களில், 99 , ஆன்லைனில், 1,790 என மொத்தம், 1,889 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, முகாம்களில், 245, ஆன்லைனில், 2,610 என, 2,855 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு, சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்த பணிகள் மேற்கொள்ள, முகாம்களில், 706, ஆன்லைனில் 8,785 என மொத்தம் 9,491 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மடத்துக்குளம் தொகுதியில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, முகாம்களில், 301, ஆன்லைனில், 3,231 பேர் என, 3,532 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய, முகாம்களில், 99, ஆன்லைனில், 789 என, மொத்தம் 884 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள, முகாம்களில், 151, ஆன்லைனில், 1,875 என மொத்தம், 2,026 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு, மடத்துக்குளம் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள, முகாம்கள் வாயிலாக, 550, ஆன்லைன் வாயிலாக, 5,892 விண்ணப்பங்கள் என, மொத்தம், 6,442 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில், புதிதாக இணைய, 8.279 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய, 2,763 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
திருத்தங்கள் மேற்கொள்ள, 4,881 பேரும் என, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகளில், இரு தொகுதிகளிலும், மொத்தம், 15 ஆயிரத்து, 933 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சுருக்க முறை திருத்த பணிகளின் போது பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்; அதனடிப்படையில், வரும் ஜன., 6ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறுதிப்பட்டியலில் தங்களது பெயர்கள் வருவதை, இளைஞர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.