/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்; 'டிமிக்கி' அலுவலர்களுக்கு 'டோஸ்'
/
மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்; 'டிமிக்கி' அலுவலர்களுக்கு 'டோஸ்'
மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்; 'டிமிக்கி' அலுவலர்களுக்கு 'டோஸ்'
மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்; 'டிமிக்கி' அலுவலர்களுக்கு 'டோஸ்'
ADDED : மார் 26, 2025 11:29 PM
திருப்பூர்; மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பூர் மாநகராட்சி, நல்லுார் மண்டல அலுவலகத்தில் சமீபத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மேயர் தினேஷ்குமார், மண்டல தலைவர் கோவிந்தசாமி, உதவி கமிஷனர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒரு சில கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டம் முக்கியமாக பணிகள் நிலவரம் குறித்து நடக்கும் நிலையில், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் பலரும் பங்கேற்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மேயர், கூட்டத்தில் பங்கேற்காத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினருக்கு கடுமையான 'டோஸ்' விட்டதோடு, இது குறித்து விளக்கம் கேட்டுப் பெறவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், இதனால் பொதுமக்கள், போக்குவரத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் குறிப்பிட்டனர். பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெறும் பணிகளில் தேக்க நிலை உள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் துவங்கிய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து உரிய அலுவலர்களுக்கே விவரம் தெரியவில்லை.
வரி விதிப்பு மண்டலம் பிரிப்பின் போது கட்டாயம் வார்டு கவுன்சிலரிடம் கருத்து கேட்க வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வரியினங்களை விட, நடப்பாண்டு மட்டும் நிலுவையில் உள்ளோரிடம் கடுமை காட்டுவது தவிர்க்க வேண்டும்.
கடை வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களிடம், 'மாமூல்' வசூலிக்கின்றனர். யார் பெயரைக் குறிப்பிட்டு யார் வசூல் செய்கின்றனர் என்பது தெரியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால், அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.