/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஆக 30, 2024 03:10 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியாப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 30; இவர், 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி கடந்த, 2019, ஜன., 22 ல் பாலியல் பலாத்காரம் செய்தார். இதேபோன்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததில், அப்பெண் கர்ப்பமானார். அவரை திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுத்த பிரபாகரனை, ஆரணி தாலுகா போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, நேற்று குற்றவாளி பிரபாகரனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார்.