/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
200 ஆண்டு பழைய கல்வெட்டு கண்டெடுப்பு
/
200 ஆண்டு பழைய கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED : ஜூன் 02, 2024 02:29 AM

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சூரிய குளம் அருகில் உள்ள கோதண்டராமர் கோவில் புனரமைப்பு பணியின் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் புதர் மண்டிய குளம் சீரமைக்கும் பணி நடந்தது.
தெலுங்கு மொழி
அப்போது, கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை வரலாற்று ஆய்வாளர் விஜயன், கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் தலைமையிலான குழுவினர் பார்த்தபோது, தெலுங்கு மொழியில் எழுத்துக்கள் இருப்பது தெரியவந்தது.
வரலாற்று ஆய்வாளர் விஜயன் கூறியதாவது:
காசியிலிருந்து, 200 ஆண்டுகளுக்கு முன் துர்க பிரசாத் சுவாமிகள், தென்னாட்டு யாத்திரை வந்தபோது ஆரணி வந்துள்ளார்.
1879ம் ஆண்டு
ஆரணி சூரிய குளத்தின் அருகில் தங்கியிருந்த போது, குளத்தின் துாய்மையான நீரும், பசுமையும் அவருக்கு மிகவும் பிடித்ததால், சில காலம் அங்கே தங்கி, அனுமன் கோவில், கோதண்டராமர் கோவிலை கட்டினார்.
இந்த ராமர் கோவிலில் தற்போது கிடைத்த கல்வெட்டு, 1879ம் ஆண்டு பிரமாதி வருடம், துளசி வனம் என்ற பிருந்தாவனத்தை, ஜகதேவி கஸ்துாரி ரங்கைய நாயுடு என்பவரின் மகன் லட்சுமி நாராயணப்பா என்பவர் அமைத்து தந்துள்ளார் என, தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.