/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சாலையில் காயவைத்த நெல்லால் பைக்கிலிருந்து விழுந்தவர் பலி; நடவடிக்கை கோரி மறியல்

ADDED : மே 11, 2024 07:12 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, சாலையில் கருங்கற்கள் வைத்து நெல் உலர்த்தியபோது, அவ்வழியாக பைக்கில் சென்றவர் கருங்கல் மீது மோதி தவறி விழுந்து பலியானார். நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கன்னருக்கை கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி கங்காதுரை, 46. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பஜாஜ் பைக்கில் கட்டட பணிக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பாச்சல் அருகே வந்தபோது, திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில், சிலர் அறுவடை செய்யப்பட்ட நெல்களை உலர வைத்திருந்தனர். அந்த நெல் மீது வாகனங்கள் ஏறாமல் இருக்க, கருங்கற்களை சாலையில் அடுக்கி வைத்திருந்தனர். அந்த கற்கள் மீது, கங்காதுரை பைக் ஏறியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். இது குறித்து பாச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சாலையில் கருங்கல் வைத்து நெல்லை உலர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று கங்காதுரை உறவினர்கள் கன்னகுருக்கை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.