/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
காட்டுப்பன்றிக்கு வைத்த மருந்தை தின்ற மாடுகள் பலி
/
காட்டுப்பன்றிக்கு வைத்த மருந்தை தின்ற மாடுகள் பலி
ADDED : மே 28, 2024 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னுாரில், ஏரி அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்து வருகின்றன. இது போன்று கடந்த, 2 நாட்களில், 6 ஆடுகள், 10 மாடுகள் பலியாகின.
இதனால், அதிர்ச்சியடைந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட மருந்துகளை ஆங்காங்கே வைத்துள்ளதும், இதை சாப்பிட்டதில், ஆடு மாடுகள் பலியானதும் தெரியவந்தது. இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.