/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஆடு திருட்டுக்கு ரூ.3 லட்சம் அபராதம் தொழிலாளி தற்கொலை; 4 பேர் கைது
/
ஆடு திருட்டுக்கு ரூ.3 லட்சம் அபராதம் தொழிலாளி தற்கொலை; 4 பேர் கைது
ஆடு திருட்டுக்கு ரூ.3 லட்சம் அபராதம் தொழிலாளி தற்கொலை; 4 பேர் கைது
ஆடு திருட்டுக்கு ரூ.3 லட்சம் அபராதம் தொழிலாளி தற்கொலை; 4 பேர் கைது
ADDED : மே 29, 2024 01:43 AM
செங்கம்:செங்கம் அருகே ஆடு திருடியவருக்கு ஊர் நாட்டாண்மை உள்ளிட்ட, 10 பேர் சேர்ந்து, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததால், தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கோட்டங்கல் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 48, கூலித்தொழிலாளி. இவர், கடந்த 17ம் தேதி நள்ளிரவு நண்பர்களுடன் சேர்ந்து ஆடு திருடினார்.
ஆட்டின் உரிமையாளர், ஆடு திருடிய முருகன் உட்பட இருவரை பிடித்து, ஊர் நாட்டாண்மை செல்வராஜி மற்றும் பஞ்சாயத்துதாரர்கள் கிருஷ்ணன், ஜீவா, சிவா ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
பஞ்சாயத்துதாரர்கள் விசாரித்து, ஆடு திருடிய முருகனுக்கு, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மனமுடைந்த முருகன், 22ம் தேதி விஷம் குடித்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜி, கிருஷ்ணன், ஜீவா மற்றும் சிவா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆறு பேரை தேடி வருகின்றனர்.