/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வால் தீக்குளித்த விவசாயி
/
லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வால் தீக்குளித்த விவசாயி
ADDED : ஜூலை 02, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலசப்பாக்கம் : திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மஷார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 40; விவசாயி. இவரது நிலம், உதிரம்பூண்டி யில் உள்ளது.
நிலத்திற்கு விவசாய கடன் பெற, தேவனாம்பட்டு வி.ஏ.ஓ., காந்தி, 48, என்பவரிடம், பட்டா, சிட்டா, அடங்கல் கேட்டு விண்ணப்பித்தார்.
காந்தி லஞ்சம் கேட்கவே, தர விரும்பாத ராமகிருஷ்ணன் மனமுடைந்து, தேவனாம்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
படுகாயமடைந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.