/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 106 செம்மரக்கட்டை பறிமுதல்
/
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 106 செம்மரக்கட்டை பறிமுதல்
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 106 செம்மரக்கட்டை பறிமுதல்
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 106 செம்மரக்கட்டை பறிமுதல்
ADDED : நவ 19, 2025 05:07 AM
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேல் நகரை சேர்ந்தவர் ரவி, 45; அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. இவருக்கு சொந்தமான வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு வந்த தகவலில், நேற்று மதியம் அவரது வீட்டை சோதனை செய்து, அங்கிருந்த, 2 டன் எடையுள்ள, 106 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில், அ.தி.மு.க., பிரமுகர் ரவி, இரண்டு ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வருவதும், அந்த வீட்டை ரவியின் அண்ணன் மகன் ரமேஷ், அவருக்கு தெரியாமல் வீட்டு பூட்டை உடைத்து பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
மேலும், ரவிக்கும், ரமேஷுக்கும் முன்விரோதம் இருந்து வருவதால், ரவியை சிக்க வைக்க ரமேஷ் செம்மரக்கட்டையை அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.