/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சாத்தனுார் அணைக்கு 3,500 கன அடி நீர்வரத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ADDED : அக் 27, 2024 04:05 AM
திருவண்ணாமலை: சாத்தனுார் அணைக்கு வினாடிக்கு, 3,500 கன அடி நீர்வரத்தால், அணை பாதுகாப்பு கருதி, 1,350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், திருவண்ணாமலை சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், 119 அடி உயரம், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட சாத்தனுார் அணைக்கு, தற்போது வினாடிக்கு, 3,500 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 113.90 அடி உயரத்துடன், 6,211 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. அணை பாதுகாப்பு கருதி, 1,350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரமுள்ள கொளமங்சனுார், திருவடத்தனுார், புதுார் செக்கடி, எடத்தனுார், ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, உலகலாப்பாடி, எம்.புதுார், சதா குப்பம் உள்ளிட்ட, 14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.