/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அரசு செவிலியர் வீட்டில் 36 சவரன் நகை திருட்டு
/
அரசு செவிலியர் வீட்டில் 36 சவரன் நகை திருட்டு
ADDED : அக் 24, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை,:திருவண்ணாமலையில், அரசு செவிலியர் வீட்டில், 36 சவரன் நகை திருடு போய் உள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி வளாக குடியிருப்பில் வசிப்பவர், செவிலியர் பர்வீன், 43. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்று விட்டு, அன்றிரவு பணி முடிந்து வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவிலிருந்த, 36 சவரன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போனது தெரிந்தது.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.