/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
'விவசாயம் தழைக்கும்; கால்நடைகள் பெருகும்' தி.மலை கோவில் பஞ்சாங்கம் வாசிப்பில் தகவல்

ADDED : ஏப் 15, 2025 06:30 AM
திருவண்ணாமலை: தமிழ் புத்தாண்டான, விசுவாவசு வருடபிறப்பை ஒட்டி திருவண்-ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின் விநாயகருக்கு தங்க கவசம், அருணாசலேஸ்வரர் மூலவருக்கு தங்க நாகாபரணம், வெள்ளி ஆவுடையார் சாத்தப்-பட்டது.
உண்ணாமுலையம்மனுக்கு வைர கிரீடம், தங்க காசு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. தமிழ் புத்தாண்டு பிறப்பால் அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். பலர் தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.
கோவில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து, சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்தனர். 'நல்ல மழை பெய்து, விவசாயம் தழைக்கும். பசு மற்றும் காளை உள்ளிட்ட கால்நடைகள் பெருகும்' என பலன் கூறினர்.