/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அருணாசலேஸ்வரர் கோவில் 'வெறிச்'
/
அருணாசலேஸ்வரர் கோவில் 'வெறிச்'
ADDED : அக் 21, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, கடந்த இரு ஆண்டுகளாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநில பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் வார விடுமுறை நாட்களில் கோவிலில் கூட்டம் நிரம்பி வழியும். பொது தரிசனத்தில், 2 மணி நேரம் முதல், 3 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் வார விடுமுறை நாளான நேற்று, வெளி மாநில பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து, கோவில் வளாகம் வெறிச்சோடியது. அதேசமயம் தீபாவளிக்கு துணி எடுக்க சென்றதால், உள்ளூர் பக்தர்களும் குறைவாகவே வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவில் வளாகம் வெறிச்சோடியதாக, பக்தர்கள் தெரிவித்தனர்.