/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா கொடியேற்றம்
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா கொடியேற்றம்
ADDED : டிச 05, 2024 04:41 AM

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன், முதல் நாள் விழா துவங்கியது.
இதையொட்டி அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள், தங்கக்கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க காலை, 6:25 மணிக்கு, 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
வரும் 10ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 13 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மகாதீபம், 11 நாட்களுக்கு எரியும்.
தீப விழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாலை அணியத் துவங்கி உள்ளனர். இவர்கள், விழா நாட்களில் விரதமிருந்து, மகா தீபத்தைக் கண்டு வழிபடுவர். தீபத் திருவிழா துவங்கியுள்ள நிலையில், கோவில் வளாகம், நகரம் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.