/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஐ.டி.ஐ., படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டர் கைது
/
ஐ.டி.ஐ., படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டர் கைது
ஐ.டி.ஐ., படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டர் கைது
ஐ.டி.ஐ., படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டர் கைது
ADDED : அக் 27, 2024 04:21 AM
ஆரணி: ஆரணி அருகே, ஐ.டி.ஐ., படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்-சையளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கொசப்பாளை-யத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 53. ஐ.டி.ஐ., படித்த இவர், மருசூர் கிராமத்தில் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் சென்றது. அதன்படி, ஆரணி அரசு மருத்துவ-மனை முதன்மை மருத்துவ அலுவலர் நந்தனி தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று அங்கு சென்று, சோதனை நடத்-தினர்.அப்போது அவர், நோயாளிகளுக்கு, ஆங்கில மருத்துவம் பார்த்-தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மருந்து, மாத்திரை-களை பறிமுதல் செய்து, சீனிவாசனை பிடித்து, ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், சீனிவாசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
* திருப்பத்துார் மாவட்டம், வாணிம்பாடி அடுத்த முல்லை நிம்-மியம்பட்டை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 50. பிளஸ் 2 மட்டும் படித்த அவர், வீட்டிலேயே கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, வாணியம்பாடி அரசு மருத்துவமனை டாக்டர் தினேஷிற்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று, அவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அங்கு சென்று சோதனை செய்ய சென்றனர். அப்போது மஞ்சுநாதன் தப்பியோ-டினார். இது குறித்து, ஆலங்காயம் போலீசில் புகார் செய்யப்-பட்டது.