/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
நிலத்தை அபகரித்ததால் தீக்குளித்த விவசாயி சாவு; உறவினர் மறியல்
/
நிலத்தை அபகரித்ததால் தீக்குளித்த விவசாயி சாவு; உறவினர் மறியல்
நிலத்தை அபகரித்ததால் தீக்குளித்த விவசாயி சாவு; உறவினர் மறியல்
நிலத்தை அபகரித்ததால் தீக்குளித்த விவசாயி சாவு; உறவினர் மறியல்
UPDATED : ஜன 06, 2024 01:06 PM
ADDED : ஜன 06, 2024 01:03 PM
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, மோசடியாக நிலம் அபகரிக்கப்பட்டதால், மனமுடைந்த விவசாயி தீக்குளித்ததில் உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் நவம்பட்டு, இருதயபுரத்தை சேர்ந்த விவசாயி பழனி, 68; இவருக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியை சேர்ந்த ராயப்பன் முன்னிலையில், தச்சம்பட்டை சேர்ந்த ரவி, 50, இவரது மனைவி சென்னம்மாள், 48, ஆகியோரிடம் அடமானம் வைத்து, ௨௦௧௭ல் பணம் பெற்று பத்திரப்பதிவும் செய்து கொடுத்தார்.
சில நாட்களுக்கு முன், பணத்தை கொடுத்து விட்டு நிலத்தை தருமாறு ரவி வீட்டுக்கு சென்று கேட்டார். நிலத்தை வேறொருவருக்கு ரவி விற்று விட்டது தெரிந்தது. இந்த மோசடிக்கு உடந்தையாக ராயப்பன் செயல்பட்டுள்ளார். இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன் ராயப்பன் வீட்டுக்கு சென்ற பழனி நியாயம் கேட்டுள்ளார். அப்போது அவர் அவதுாறாக பேசியதால் மனமுடைந்ததில் பழனி, ராயப்பன் வீட்டு எதிரிலேயே தீக்குளித்தார். படுகாயமடைந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு இறந்தார்.இதையடுத்து தச்சம்பட்டு போலீசார், ராயப்பனை கைது செய்தனர். தலைமறைவான ரவி, அவரது மனைவி சென்னம்மாளை தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மோசடி செய்து பெற்ற நிலத்தை திரும்ப பெற்று தர வலியுறுத்தியும், சடலத்துடன் திருவண்ணாமலை-திருக்கோவிலுார் சாலையில் நேற்று இரவு, 7:00 முதல் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.