/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
விஷம் கொடுத்து கணவன் கொலை ஆண் நண்பருடன் மனைவி கைது
/
விஷம் கொடுத்து கணவன் கொலை ஆண் நண்பருடன் மனைவி கைது
விஷம் கொடுத்து கணவன் கொலை ஆண் நண்பருடன் மனைவி கைது
விஷம் கொடுத்து கணவன் கொலை ஆண் நண்பருடன் மனைவி கைது
ADDED : அக் 26, 2024 07:07 AM
சேத்துப்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுதாகர், 40. இவரது மனைவி ரம்யா, 36. இவர்களுக்கு இரு மகன்கள், மகள் உள்ளனர்.
இவரது நண்பர் கோழிப்புலியூரை சேர்ந்த சீனுவளவன், 30. சுதாகரும், சீனுவளவனும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். பையூரை சேர்ந்த பெருமாள், 45, என்பவர் நெல் அறுவை இயந்திரம் வைத்து தொழில் செய்கிறார்.
அவருக்கும், ரம்யாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை கண்டிக்குமாறு நண்பர் சீனுவளவனிடம், சுதாகர் கூறினார். சீனுவளவன், ஆண் நண்பர் பெருமாளுக்கு அறிவுரை கூறினார்.
இந்நிலையில், சீனுவளவனும், பெருமாளும் நண்பராகி விட்டனர். ரம்யாவும், பெருமாளும் சேர்ந்து, தங்கள் நட்புக்கு இடையூறாக இருக்கும் சுதாகரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதற்கு, சீனுவளவனிடம் உதவி கேட்டனர்.
அப்போது, சீனுவளவன், 3 லட்சம் ரூபாய் கேட்டார். பெருமாள், 1 லட்சம் ரூபாயை சீனுவளவனிடம் தந்தார்.
சீனுவளவன் கடந்த, 17ம் தேதி சுதாகரை மது அருந்த அழைத்துச் சென்றார். ரம்யாவும், பெருமாளும் விஷம் கலந்த மதுவை சுதாகருக்கு கொடுத்தனர்.
சாவில் சந்தேகம்
இதில், மயங்கிய சுதாகர், கோழிப்புலியூர் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் படுத்திருந்தபோது, வாயில் நுரை தள்ளி சிறிது நேரத்தில் பலியானார். உறவினர்கள், மது குடித்ததில் இறந்ததாக நினைத்து அடக்கம் செய்தனர்.
இவரது சாவுக்கு நண்பர் சீனுவளவன் வராததால், உறவினர்கள் சந்தேகமடைந்து விசாரித்த போது, 17ம் தேதி அய்யப்பன் கோவிலுக்கு போவதாக மாலை அணிந்து கொண்டு, சாவுக்கு வருவதை தவிர்த்தது தெரிந்தது.
இதனால், சுதாகர் சாவில் சந்தேகம் உள்ளதாக, வட வணக்கம்பாடி போலீசில், சுதாகர் சகோதரர் வினோத் புகார் செய்தார்.
போலீசார் விசாரிக்க துவங்கியதால், சிக்கி கொள்வோம் என பயந்து சீனுவளவன் கடந்த 19ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் உடற்கூறு ஆய்விற்கு எடுத்துச் சென்றனர்.
சீனுவளவன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பின், சுதாகர் சடலத்தை தோண்டி எடுத்து, சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலா முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில், அவர் மதுவில் விஷம் கலந்து குடித்ததில் பலியானது தெரிந்தது.
மதுவில் விஷம்
போலீசார், பெருமாள், ரம்யாவை பிடித்து விசாரித்ததில், சீனுவளவனிடம் மதுவில் விஷம் கலந்து கொடுத்து, சுதாகரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, பெருமாள், ரம்யா ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.