/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
'கர்ப்பத்தில் குறைந்த ஆக்சிஜன் சென்றால் குழந்தையின் மூளை செயல்பாடு குறையும்'
/
'கர்ப்பத்தில் குறைந்த ஆக்சிஜன் சென்றால் குழந்தையின் மூளை செயல்பாடு குறையும்'
'கர்ப்பத்தில் குறைந்த ஆக்சிஜன் சென்றால் குழந்தையின் மூளை செயல்பாடு குறையும்'
'கர்ப்பத்தில் குறைந்த ஆக்சிஜன் சென்றால் குழந்தையின் மூளை செயல்பாடு குறையும்'
ADDED : பிப் 09, 2024 01:56 AM
திருவண்ணாமலை:''கருவில் இருக்கும் குழந்தைக்கு, குறைந்தளவில் ஆக்சிஜன் செல்வதால், மூளை செயல்பாடு குறைதல் மற்றும் மரபணு பிரச்னை ஏற்படும். இந்நோயால் ஆண்டுக்கு, 12 சதவீதம் குழந்தைகள் பாதிக்கின்றனர்,'' என, குழந்தைகளுக்கான நரம்பியல் கருத்தரங்கில், டாக்டர் மாயாதாமஸ் மற்றும் டாக்டர் சங்கீதா ஆகியோர் கூறினர்.
வேலுார் மாவட்டம், பாகாயம் கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரியில், 'சைல்டு நியூரோகான்' எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் பிரச்னை, நரம்பியல் நோய் தொற்று, வலிப்பு நோயினால் நரம்பு செயல்பாடு செயல்திறன் இழப்பு உள்ளிட்ட மூன்று நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்ற டாக்டர் மாயா தாமஸ், டாக்டர் சங்கீதா கூறியதாவது:
குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் நோய்கள் குறித்த இந்த, 14வது சர்வதேச கருத்தரங்கு, நாளை வரை நடக்கிறது. இதில், 600க்கும் மேற்பட்டோர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு, குறைந்தளவில் ஆக்சிஜன் செல்வதால், மூளை செயல்பாடுகள் குறைதல் மற்றும் மரபணு பிரச்னைகள் ஏற்படும்.
ஆண்டுக்கு, 12 சதவீதம் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவதோடு, 1,000த்தில், 7 குழந்தைகளுக்கு, 'எபிலேப்சி' நரம்பு நோய் உள்ளது. இவ்வாறான பாதிப்பு, சொந்தத்தில் திருமணம் செய்தாலும் ஏற்படுகிறது.
இதற்காக தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சை எடுக்க வேண்டும். தொடர்ந்து சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகளால், குழந்தைகளின் வாழ்நாள் ஆயுட் காலத்தை அதிகரிக்க முடியும். 'எபிலேப்சி' எனப்படும் மூளை நோய், 'டேப் வார்ம்' எனப்படும் நோய் கிருமியால் ஏற்படும்.
இவ்வாறு கூறினர்.

