/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அரசு பஸ் - கார் மோதலில் லாரி உரிமையாளர் 4 பேர் பலி
/
அரசு பஸ் - கார் மோதலில் லாரி உரிமையாளர் 4 பேர் பலி
அரசு பஸ் - கார் மோதலில் லாரி உரிமையாளர் 4 பேர் பலி
அரசு பஸ் - கார் மோதலில் லாரி உரிமையாளர் 4 பேர் பலி
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அரசு பஸ், கார் மோதிக்கொண்டதில், லாரி உரிமையாளர்கள், நான்கு பேர் பலியாகினர்.
திருவண்ணாமலை அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான ஒரு அரசு பஸ், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, ௧௧:௦௦ மணிக்கு திருவண்ணாமலை புறப்பட்டது. திருவண்ணாமலை அருகே சோ.காட்டுக்குளம் என்ற பகுதியில் நேற்று அதிகாலை, 3:10 மணியளவில் பஸ் வந்தது.
அப்போது எதிரே வந்த ஹூண்டாய் கிரிட்டா கார், கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது மோதியது. இதில் காரில் பயணித்த ஸ்டாலின், 44, சதீஷ், 40, சரோஷ், 40, சைலேஷ், 40, ஆகியோர், சம்பவ இடத்தில் பலியாகினர். கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரணையில், புதுச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர்களான நான்கு பேரும், பெங்களூரு சென்று விட்டு ஊருக்கு திரும்பியது தெரிய வந்தது.