/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பிரான்ஸ் பெண் பலாத்காரம் கஞ்சா நபர் கைது
/
பிரான்ஸ் பெண் பலாத்காரம் கஞ்சா நபர் கைது
ADDED : மார் 20, 2025 01:37 AM

திருவண்ணாமலை:பிரான்ஸ் நாட்டு பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, 46 வயது பெண், ஜனவரியில் ஆன்மிக பயணமாக திருவண்ணாமலை வந்தார்.
கடந்த, 17ம் தேதி அண்ணாமலையார் மலை மீதுள்ள கந்தாஸ்ரமத்திற்கு தியானம் செய்ய சென்றார். வழியில், மேற்கு கோபுர தெருவை சேர்ந்த வெங்கடேசன், 30, என்பவர், அவரிடம், மேலே உள்ள ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் என கூறி அழைத்துச் சென்றார்.
அப்பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், கஞ்சா போதையில் இருந்த வெங்கடேசன், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார். அப்பெண் பிரான்ஸ் நாட்டு துாதரகத்திற்கு தெரிவித்தார். புகாரையடுத்து, திருவண்ணாமலை போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர்.