/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கைத்துப்பாக்கியை காட்டி ஆசிரியரை மிரட்டியவர் கைது
/
கைத்துப்பாக்கியை காட்டி ஆசிரியரை மிரட்டியவர் கைது
ADDED : ஜூலை 30, 2025 01:05 AM
தண்டராம்பட்டு; கைத்துப்பாக்கியை காட்டி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த, மீன் பண்ணை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஏ.கே., நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 52; அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி அபிராமி, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மூர்த்தி, தன் வீட்டின் மேல் தளத்தை, மீன் பண்ணை உரிமையாளரான கீழ்வணக்கம்பாடியை சேர்ந்த சையத் அலி, 48, என்பவருக்கு, ஓராண்டு குத்தகைக்கு வழங்கியிருந்தார்.
குத்தகை முடிவடைய உள்ள நிலையில், வீட்டை காலி செய்ய இரு நாட்களுக்கு முன் மூர்த்தி கூறினார். அப்போது, சையத் அலி, 'வீட்டை காலி செய்ய முடியாது. அப்படி காலி செய்ய சொன்னால், சுட்டுக் கொலை செய்து விடுவேன்' என, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார்.
அபிராமி புகாரில், தண்டராம்பட்டு போலீசார் விசாரித்து, சையத் அலியை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை செய்தபோது, உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்து, அதை பறிமுதல் செய்தனர்.