/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட மஹாரதம்; 8ம் தேதி வெள்ளோட்டம்
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட மஹாரதம்; 8ம் தேதி வெள்ளோட்டம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட மஹாரதம்; 8ம் தேதி வெள்ளோட்டம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட மஹாரதம்; 8ம் தேதி வெள்ளோட்டம்
ADDED : நவ 04, 2024 06:13 AM

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மஹாரதம், வரும், 8ம் தேதி வெள்ளோட்டம் நடத்தப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழா பிரம்மோற்சவம், 17 நாட்கள் நடக்கும். இதில், 7ம் நாள் விழாவில், 59 அடி உயரம், 200 டன் எடை கொண்ட மஹா ரத வீதிஉலா நடக்கும். ரதம் கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது மஹா ரதத்தின் உறுதி தன்மை குறைந்து காணப்பட்டது. அதை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் சார்பில், 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்தது. இதை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்பு அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மஹா ரத தேரிலுள்ள தேவாசனம், நராசனம், சிம்மாசனம், அங்கார துாண்கள் மற்றும் பலகைகள், 4 கொடுங்கை நிலை, மஹாரத கண்டத்தில் உள்ள குத்துகால்கள், பிரம்மா, துவாரபாலகர், சிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மஹா ரதத்தில் புதியதாக, சிம்மயாழி, கொடியாழி, தேர் சிற்பங்கள் என, மொத்தம், 203 சிற்ப சிலைகள் புதியதாக பொருத்தப்பட்டு, மஹா ரதம் முழுவதும் பஞ்ச வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கும் பணியால், மேலும், 50 ஆண்டு முதல், 80 ஆண்டுகள் வரை, உறுதி தன்மையோடு ரதம் இருக்கும். இவற்றின் வெள்ளோட்டம் வரும், 8ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.