/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தவளகிரீஸ்வரர் மலைக்கு சமூக விரோதிகள் தீ வைப்பு; அரிய மூலிகைகள் எரிந்து நாசம்

ADDED : மே 11, 2024 07:12 AM
வந்தவாசி : வந்தவாசி அருகே, தவளகிரீஸ்வரர் மலைக்கு சமூக விரோதிகள் தீ வைத்ததில், அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமடைந்தன.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வென்குன்றம் கிராமத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில், 1,440 அடி உயரம் கொண்ட மலையில், ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலை கோவில் உள்ளது. மலை உச்சியில் தவளகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமி தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மலை முழுவதும் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், பல வகையான உயிரினங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சமூக விரோதிகள் மலை மீது தீ வைத்தனர். இதனால், மலை முழுவதும் தீ பரவி, அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகின. இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது, வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.