/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 'என் மண், என் மக்கள்' நடை பயணம்
/
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 'என் மண், என் மக்கள்' நடை பயணம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 'என் மண், என் மக்கள்' நடை பயணம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 'என் மண், என் மக்கள்' நடை பயணம்
ADDED : ஜன 30, 2024 03:26 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, பா.ஜ., தெற்கு மாவட்டத்தில், இன்று, 30 ம் தேதி நடக்கும் 'என் மண், என் மக்கள்' நடை பயண நிகழ்ச்சிக்காக, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வருகை தர உள்ளார்.
இன்று காலை, 10:00 மணிக்கு கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, வேலுார் பஸ் நிறுத்தம் அருகில் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. கீழ்பென்னாத்துார் தாலுகா அலுவலகம் முன்பு, மாலை, 4:00 மணிக்கு துவங்கி, கீழ்பென்னாத்துார் பஸ் நிறுத்தத்தில் நிறைவடைகிறது. திருவண்ணாமலையில், மாலை, 5:00 மணிக்கு காமராஜர் சிலையில் தொடங்கி, காந்தி சிலையில் முடிவடைந்து, அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார். நாளை, 31 ல் செங்கம் மில்லத் நகர், சிவானி சில்க்ஸ் அருகில் இருந்து பறப்பட்டு, எம்.ஜி.ஆர். சிலை அருகில், செங்கம் பஸ் ஸ்டாண்டில் நடைபயணம் நிறைவடைகிறது. தொடர்ந்து, திருப்பத்துார் மாவட்டம் புறப்பட்டு செல்கிறார்.