/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஏரி மண் கடத்திய இரு டிராக்டர் பறிமுதல்
/
ஏரி மண் கடத்திய இரு டிராக்டர் பறிமுதல்
ADDED : ஜூன் 07, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி : ஆரணி அருகே ஏரி மண் கடத்திய, இரண்டு டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியாப்பாடியில் உள்ள பெரிய ஏரி பகுதியில், ஆரணி தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இரண்டு டிராக்டர்களில் மண் கடத்தி கொண்டு சென்றனர். போலீசார் பிடிக்க முயன்றபோது, அதன் டிரைவர்கள் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இரண்டு டிராக்டரையும், திருவண்ணாமலை தாலுகா போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிறுமூர் கிராமத்தை சேர்ந்த முருகன், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.