/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு
/
திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு
திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு
திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு
ADDED : ஜன 20, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கொழப்பலுார் கிராமத்தை சேர்ந்த நடேசன் மகள் தேன்மொழி, 23; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன், 27, என்பவருக்கும், திருமணம் செய்ய முடிவாகி நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.
இருவரும் நேற்று முன்தினம் ஹோண்டா பைக்கில், சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் சென்றனர். அதிவேகமாக சென்ற பைக்கிலிருந்து தடுமாறி சாலையில் விழுந்த தேன்மொழி தலையில் பலத்த காயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அன்றிரவே இறந்தார். சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.