/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி அருகே பெண் பஞ்., தலைவர் வீட்டில் ரூ.1 கோடி சிக்கிய பின்னணி
/
திருச்சி அருகே பெண் பஞ்., தலைவர் வீட்டில் ரூ.1 கோடி சிக்கிய பின்னணி
திருச்சி அருகே பெண் பஞ்., தலைவர் வீட்டில் ரூ.1 கோடி சிக்கிய பின்னணி
திருச்சி அருகே பெண் பஞ்., தலைவர் வீட்டில் ரூ.1 கோடி சிக்கிய பின்னணி
ADDED : ஏப் 14, 2024 06:21 AM
திருச்சி : திருச்சி அருகே அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 1 கோடி ரூபாய் சிக்கிய பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை பஞ்., தலைவர் திவ்யா, 38. இவரது கணவர் அன்பரசன். இருவரும் அ.தி.மு.க.,வில் உள்ளனர். அன்பரசன் அ.தி.மு.க., வடக்கு மாவட்ட ஜெ., பேரவை இணை செயலராக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, பஞ்., தலைவர் திவ்யா வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, ஸ்ரீரங்கம் தொகுதி பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை மற்றும் போலீசார் உதவியோடு அங்கு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வீட்டின் உள்ளே ஒரு பையில், 1 கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
பின், பஞ்., தலைவர் திவ்யாவை வருமான வரி அதிகாரிகள், தங்கள் அலுவலகம் அழைத்துச் சென்று, பணம் குறித்து விசாரணை நடத்தினர். பின், நள்ளிரவில் அவரை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
இதில், அன்பரசன், திருச்சி அ.தி.மு.க., வடக்கு மாவட்ட செயலர் பரஞ்ஜோதியின் சகோதரர். ஆகையால், தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த பணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
முன்னதாக, திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள பெரியார் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அன்பரசனும், அவரது நண்பரான திருச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம், 50, பிரதாப், 41, ஆகியோர், இரு கார்களில் அவ்வழியே வந்துள்ளனர்.
இரு காரையும் நிறுத்தி போலீசார் சோதனையிட முயன்ற போது, மூவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையடுத்து, இரு கார்களுடன் மூவரையும், போலீசார் முசிறி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர், எட்டரையில் உள்ள அன்பரசன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில், 1 கோடி ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த பணம் தேர்தல் செலவுக்காக வந்தது தான் என்பதை வருமான வரித்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

