/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பல்கலை அளவிலான பளு துாக்கும் போட்டி பாரதிதாசன் பல்கலை வீரர்கள் கோரிக்கை
/
பல்கலை அளவிலான பளு துாக்கும் போட்டி பாரதிதாசன் பல்கலை வீரர்கள் கோரிக்கை
பல்கலை அளவிலான பளு துாக்கும் போட்டி பாரதிதாசன் பல்கலை வீரர்கள் கோரிக்கை
பல்கலை அளவிலான பளு துாக்கும் போட்டி பாரதிதாசன் பல்கலை வீரர்கள் கோரிக்கை
ADDED : மே 15, 2024 08:52 PM
திருச்சி,:'பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், அகில இந்திய அளவிலான பளு துாக்கும் போட்டியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பளு துாக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர்கள் எட்டு பேர் கூறியதாவது:
வரும் 20ம் தேதி, சென்னையில், அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளு துாக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காததால், அந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லுாரிகளில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர் வலு துாக்கும் போட்டியில் பங்கேற்க, தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகமும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறிய அவர்கள், கலெக்டர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத் தரப்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டு துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. கிடைத்த பதில்:
அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில், எந்தெந்த விளையாட்டுக்கான அணிகள் இடம் பெறுவது என பல்கலைக்கழக பொது குழுவில் முடிவு செய்யப்படும். அதன்படி, கல்லுாரிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தி, பல்கலைக்கழக அணி தேர்வு செய்யப்படும்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக பொதுக்குழுவில், எந்த கல்லுாரியும் பளு துாக்கும் போட்டியை தேர்வு செய்யவில்லை. பெரும்பாலான கல்லுாரிகளில், பளு துாக்கும் அணி இல்லாததும் இதற்கு காரணம்.
இது தவிர, அகில இந்திய பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு, விடுமுறை காலத்தில், அகில இந்திய அளவிலான போட்டியை நடத்துவதாக திடீரென அறிவித்துள்ளது. எனவே, கல்லுாரிகளுக்கு இடையே போட்டியை நடத்தி, அணியை தேர்வு செய்ய போதிய அவகாசம் இல்லை. போட்டியே நடத்தாமல், பல்கலைக்கழக அணியை தேர்வு செய்து, போட்டிக்கு பரிந்துரைக்க இயலாது.
இவ்வாறு பல்கலைக்கழக விளையாட்டுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.