/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நில அபகரிப்பு செய்தவருக்கு 'மாவுக்கட்டு'
/
நில அபகரிப்பு செய்தவருக்கு 'மாவுக்கட்டு'
ADDED : செப் 16, 2024 01:33 AM
திருச்சி: திருச்சி, பஞ்சப்பூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருவதால், கே.சாத்தனுார், ஓலையூர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொட்டப்பட்டு செந்தில், 48, கே.சாத்தனுார் அண்ணாமலை, 49, ஆகியோர், போலி ஆவணங்கள் தயார் செய்து, நில உரிமையாளர்களை மிரட்டி, நிலத்தை அபகரித்து வருவதாக புகார் எழுந்தது.
விசாரணை நடத்திய எஸ்.பி., வருண்குமாரின் தனிப்பிரிவு போலீசார், கட்டப்பஞ்சாயத்து செய்தும், மிரட்டியும் நிலம் அபகரிப்பு செய்த செந்திலை கைது செய்ய முயன்றனர். போலீசாரிடம் இருந்து தப்ப, அவர் ஓடிய போது, இடது காலில் முறிவு ஏற்பட்டது.
மாவு கட்டு போடப்பட்ட அவரை, நேற்று கைது செய்த போலீசார், அண்ணாமலையை தேடி வருகின்றனர்.